LATEST

6/recent/ticker-posts

அருமையான மிளகு சாதம் செய்வது எப்படி_Arumaiyana-Milagu-Satham-Seivathu-Eppadi

!!அருமையான மிளகு சாதம் செய்வது எப்படி!!


■தேவையான பொருட்கள்:
● அரிசி = 1/2 Kg
● மிளகு = 4 ஸ்பூன்
● சிரகம் = 1 ஸ்பூன்
● வெங்காயம் = 2 அல்லது தேவையான அளவு
● எண்ணெய், கடுகு = தேவையான அளவு
● கறிவேப்பிலை, உப்பு = தேவையான அளவு

■ செய்முறை:
● முதலில் வெங்காயத்தை சிறுசிறுவாக வெட்டி கொள்ளவும்.
● பின்பு அரிசியை நன்கு கழுவி கொள்ளவும்.
● பிறகு கழுவிய அரிசியை வேக வைத்து கொள்ளவும்.
● பின்பு மிளகு மற்றும் சீரகம் இரண்டையும்  தனி தனியே வறுத்து கொள்ளவும்.
● பின்பு முதலில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
● பின்னர் சிறு சிறுவாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ளவும்.
● அடுத்து வேக வைத்த சாதம், மிளகு மற்றும் சீரகம் ஆகியவை சேர்த்து சிறுது நேரம் கிளறி விடவும்.
● பின்பு கொஞ்சம் நேரம் அதை மூடி வைத்து பின்பு இறக்கவும்.
● அருமையான மிளகு சாதம் தயார்.

■ குறிப்பு:
★ சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு அருமையான மருந்தாகும்.