◆ உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
◆ ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
◆ உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும்.
◆ உண்ணும் போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும்.
◆ வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.
◆ சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும்.
◆ நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
◆ உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும்.
◆ நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.
◆ சாப்பிடும் முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
◆ தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.
◆ சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும்.
◆ காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
◆ தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது.
◆ உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
◆ கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்.
◆ குளித்த பின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது.
◆ சாப்பிட்ட பின் 2 மணி நேரம் குளிக்கக் கூடாது.
◆ அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.
●●●பகுதி-2 பார்க்கலாம்●●●
