LATEST

6/recent/ticker-posts

ருசியான அரிசி உப்புமா செய்வது எப்படி?_How-to-make-delicious-Rice-Uppuma

அரிசி உப்புமா செய்ய தேவையான பொருள் மற்றும் செய்முறை? 


■ தேவையான பொருள்:
◆ பச்சரிசி - ஒன்றரை கப்
◆ உப்பு - தேவையான அளவு
◆ தேங்காய்த்துருவல் - கால் மூடி
◆ துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி

■ தாளிக்க தேவையான பொருட்கள்:
◆ எண்ணெய் - 2 தேக்கரண்டி
◆ கடுகு - 2 தேக்கரண்டி
◆ கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
◆ வெள்ளை உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
◆ மிளகாய்வற்றல் - 2
◆ பச்சைமிளகாய் - 1
◆ முந்திரிப்பருப்பு - 10
◆ இஞ்சி - 1 துண்டு
◆ கறிவேப்பிலை - தேவையான அளவு

■ செய்முறை:
◆ அரிசியை 3 மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற விட வேண்டும்.
◆ அரிசியை ஈரம் போக உலர்த்தி மிக்ஸியில் உப்பு சேர்த்து நற நற பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
◆ துவரம் பருப்பை திரித்துக் கொள்ளவும்.
◆ ஒன்றரை கப் அரிசிக்கு 4 கப் தண்ணீரை சுட வைக்கவும்.
◆ ஒரு வாணலியில் தாளிசப்பொருள்களைத் தாளித்துக் கொண்டு அரைத்த அரிசிக்கலவையைச் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் வதக்கவும்.
◆ கொதிக்கும் சுடு நீரை அரிசிக்கலவையுடன் கொட்ட வேண்டும்.
◆ பிறகு துவரம்பருப்பு, தேங்காய்த் தூள் சேர்த்துக் கிளற வேண்டும்.
◆ 8 நிமிடங்களில் அரிசி உப்புமா வெந்து விடும்.
◆ பிறகு கறிவேப்பிலை தூவி எண்ணெய் விட்டு இறக்கவும்.