LATEST

6/recent/ticker-posts

மாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்_Mambazhathil-Ulla-Maruthuva-Gunangal

!!!மாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்_Mambazhathil-Ulla-Maruthuva-Gunangal!!!

★ மா ஆனாது முக்கனிகளில் ஒன்றாகும்.
★ இதில் உயிர் சத்து ஏ-4%,பி-10%,சி-46% நிறைந்துள்ளது.
★ மாங்காயில் உள்ள பால் ஒரு சிலருக்கு தோலில் பட்டால் எரிச்சலும்,கொப்புளங்கள் ஏற்படலாம்.
★ மாம்பழத்தை சாப்பிடுவதால் வயிற்று தொல்லை போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.
★ இதில் உயிர்சத்து "சி" உள்ளதால்  புதிய இரத்த அணுவை உற்பத்தி செய்கிறது.
★ உடல் எடையை குறைக்க மாங்காயை சாப்பிடலாம்.
★ மாங்காயானது கல்லீரலுக்கு மிகவும் நல்லது.
★ குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அதாவது குடலில் இருக்கும் பாக்டீரிய தொற்றுகளை சரி செய்யும்.
★ மாங்காயை சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பி அதிகரிக்கும்.
★ மாம்பழம் சாப்பிடுவதால் மூல நோய்யின் பாதிப்பை குறைக்கிறது.
★ இது மலச்சிக்கலை போக்கும் சக்தி உடையது.
★ மாம்பழமானது வாய் மற்றும் வயிற்று புண்களை சரி செய்யும்.
★ மா இலையானது சுவாச சம்பந்த நோய்கள் இருந்தால் அதை மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் சக்தி இதற்கு உள்ளது.
★ மா கொட்டையின் கஷயத்தை குடித்தால் வயிற்றில் உள்ள புழு மற்றும் கிருமிகளை அழிக்கும் சக்தி உடையது.
★ அதோடு சர்ம எரிச்சலை கட்டுபடுத்த சிறந்த மருந்தாகும்.