LATEST

6/recent/ticker-posts

பழ வகைகளின் மருத்துவ நன்மைகள்_Pazha-Vakaikalin-Maruththuva-Nanmaikal

◆◆பழங்களின் மருத்துவ நன்மைகள்◆◆

■ ஆப்பிள்;
● புற்று நோயை தடுக்கும் சக்தி இதற்கு உள்ளது.
● வயிற்று போக்கை சரி செய்ய.
● இதய நோய்களுக்கு நல்ல மருந்து.
● இரத்த அழுத்தத்திற்கு இது நல்லது.
● சிறுநீரக கோளாறு உள்ளவருக்கும் இது நல்லது.
● மூளையை நரம்பு பாதிப்புக்கு எதிராக பாதுகாக்கிறது.

■ மாதுளம் பழம்;
● வயிற்று வலியை சரி செய்ய.
● இரத்த பேதி உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து.
● சிறு நீரை தடையின்றி வெளியேற்றுகிறது.
● அனைத்து வகையான குடல் புண்ணை சரி செய்யும் சக்தி உடையது.

■ ஆரஞ்சு பழம்;
● புற்று நோயை எதிர்த்து போராடும் சக்தி உடையது.
● சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
● கொழுப்பின் அளவை குறைக்கவும் சிறந்தது.
● இதயத்தை சீராக இயக்க இது சிறந்த மருந்தாகும்.
● கண்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவும்.

■ கொய்யா பழம்;
● எலும்புகளுக்கு பலத்தை ஏற்படுத்தும்
● மலச்சிக்கலை சரி செய்ய சிறந்த மருந்தாகும்.
● வயிற்றில் ஏற்படும் புண்ணை சரியாக்குகிறது.

■ மாம்பழம்;
● நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
● இரத்த அழுத்ததை சீராக்க சிறந்தது.

■ பப்பாளி;
● சிறுநீரக பையிள் ஏற்படும் கற்களை கரைக்கும் தன்மை உடையது.
● ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது.
● ஆண்மை தன்மை பலப்படுத்த பயன்படுகிறது.

■ திராட்ச்சை;
● இரைப்பை கோளாறுகளை சரி செய்யும்.
● பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகும்.

■  அன்னாச்சி பழம்;
● உடலில் இரத்ததை விருத்தி செய்யும்.
● உடலுக்கு பலத்தை ஏற்படுத்தும்.

■ பேரீச்சம் பழம்;
● இரத்தத்தை சுத்தம் செய்ய சிறந்த மருந்து பேரீச்சபழமாகும்.
● எலும்பை பலப்படுத்தும்.
● கண் மற்றும் நரம்பு கோளாறுகளை சரி செய்யும்.
● பல்லை கெட்டிபடுத்தும் தன்மை கொண்டது.

■ மஞ்சள் வாழை பழம்;
● மலச்சிக்கலை சரி செய்ய சிறந்த மருந்தாகும்.

■ கற்பூரவள்ளி வாழை பழம்;
● கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
● உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.
● உடல் சூட்டை தணிக்க சிறந்தது.
● உடல் எடையை குறைக்க உதவும்.

■ பச்சை வாழை பழம்;
● உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
● குடல் புண்ணை சரி செய்யும் தன்மை உடையது.
● பித்த நோய் சரி செய்யும்.
● இதயத்திற்கு வலு தருகிறது.

■ ரஸ்தாலி வாழை பழம்;
● உடலை வலுவாக வைக்கும் சக்தி உடையது.
● வயிற்று போக்கை சரி செய்யும்.
● உடல் எடையை குறைக்கவும், உடல் சோர்வு நீங்கும்.
● உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

■ நாவல் பழம்;
● வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண் சரி செய்யும்.
● உடல் சூட்டை குறைக்க பயன்படுக்கிறது.
● சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
● நோய் தடுப்பு காரணியாக நாவல்பழம் பயன்படுகிறது.

■ எலுமிச்சை பழம்;
● பேதி நிற்க சரியான மருந்து.
● தேள் கொட்டிய விஷத்தை அழிக்க சிறந்தது.
● வயிற்று வலிக்கு ஏற்ற மருந்தாகும்.

■ செவ்வாழை பழம்;
● கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்தும்.
● சிறுநீரக பிரச்சனை சரி செய்யும்.
● தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடையும்.
● உடலில் உயிர் சக்தி அணுக்கள் பெருக்கும்.