LATEST

6/recent/ticker-posts

கடையில் இருந்து இட்லி,தோசை மாவை வாங்கி பயன் படுத்துவதால் உடலில் ஏற்படும் விளைவுகள்??_What-are-the-side-effects-of-buying-and-using-itli-and-dosa-dough-from-the-store?

கடையில் இருந்து இட்லி,தோசை மாவை வாங்கி பயன் படுத்துவதால் உடலில் ஏற்படும் விளைவுகள்?? 

◆ கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது.
◆ இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது.
◆ மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.
◆ மேலும் சிறிய மளிகை கடை முதல் பெரிய மளிகை கடை வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
◆ இந்த மாவு பாய்ஸன் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
◆ இதன் பின் விளைவுகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் நம்  உறைந்து போகும் அளவிற்கு பயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது....
★ நீங்கள் வாங்கும் ஈர பத தோசை மாவிற்கும் ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது.
★ இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் பரிசோதனை செய்த பின் விற்பனைக்கு வருவதில்லை.
★ இந்த மாவு சில மட்டமான அரிசியும் உளுந்தும் முக்கியமாக மாவில் நாம் புண்ணுக்கு பயன்படுத்தும் போரிக் பவுடர் மற்றும் ஆரோட் மாவு ஆகியவற்றை கலப்பதால் மாவில் புளிப்பு வாசனை ஒருபோதும் வராது.
★ அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதைச் செய்கின்றனர்.
★ நம் வீட்டில் அரைத்த மாவை இரண்டு நாள் வைத்து மூன்றாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசைனை வரும் தோசையும் புளிக்கும். ஏன் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும்.
★ இதை தவிர்ப்பதற்காகத் தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டியும் தந்து ஒரு வாசனையும் வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் போரிக்பவுடர், ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
★ முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை.
★ அதாவது ஒரு நாளைக்கு 3 முதல் 6 வரை மணி நேரம் அரைக்க வேண்டிய இவைகள் 12 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது.
★ இந்த சிறு கருங்கற்களின் துகள்களால் தான் சமீப காலமாக நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகின்றது.
★ ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான்.
★ அதை கொத்தி போட்டாலும் அடுத்த மூன்று மாதங்கள் வரை தான் அதனைப் பயன்படுத்த முடியும்.
★ சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேண்டும்.
★ நகங்கள் வளர்க்கவே கூடாது!ஆனால் இது போன்ற சுத்தத்தை இவர்கள் பேணுவதில்லை.
★ ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில் கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகளை உருவாக்கி நம் உடலின் எதிர்ப்பு சக்தியைக் வெகுவாகக் குறைத்து வாந்தி,பேதி,போன்ற நோய்கள் வரக் காரணமாக இருக்கிறது.
★ கிரைண்டரை நம் தாய்க்குலங்கள் பயன்படுத்த தயங்குவது ஏனெனில் அதைச் சுத்தம் செய்வது கடினம்.
★ ஒவ்வொரு முறையும் குழவிக்கல்லைத் தூக்கி மாட்டுவதும் சிரமம்.
★ பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம்.
★ எனவே சிறு குடும்பங்கள் கடை மாவை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
★ மாறாக விற்பனைக்காக உற்பத்தி செய்பவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு முடிந்ததும் கழுவுவதில்லை.
★ எனவே அதில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது.
★ இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வெந்நீர் உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும்.
★ ஆனால் அவ்வாறு செய்வதில்லை.
★ வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம்.
★ எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மீத மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மை போக்கி விடுகின்றது.
★ அவர்கள் என்ன தான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும்.
★ ஆனால் இவர்கள் பயன்படுத்துவதோ உவர் தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிர்.
★ எனவே உப்பு போட வேண்டிய வேலையும் இவர்களுக்கில்லை.
★ நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள்.
★ வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி.
★ இது உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண் போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
★கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.
★ கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறையேனும் மாற்ற வேண்டும்.
★ இவர்கள் அது அறுந்து போகும் வரை பயன்படுத்துவதால் அந்த பிளாஸ்டிக் கொஞ்ச கொஞ்சமாக தேய்ந்து மாவில் கலக்கும் அபாயம் உள்ளது.
★ அரைக்கும் போது சத்தம் வராமல் இருப்பதற்காவும், மாவைக் கையால் தள்ளி விடாமல் அரைப்பதற்காகவும் ஓடும் கிரைண்டருக்கு மத்தியில் குழவியை இணைக்கும் செயின் ஒன்று இருக்கும்.
★ அந்த செயினை இவர்கள் கழற்றி விட்டு வேறு ஒரு கார்பன் பெல்ட் மாட்டி இருப்பர்கள்.
★ அந்த பெல்ட்டில் தண்ணீர் பட்டு பட்டு நாளடைவில் அதன் துகள்களும் இந்த மாவில் தான் கலக்கும்.
★ இந்த மாவை அரைத்துக் கடைகளுக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் விநியோகம் செய்கின்றனர்.
★ நமது தமிழ் நாட்டின் கிளைமேட் படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும்.
★ அப்பொழுது தான் மாவில் உருவாகும் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும்.
★ ஆனால் நம் ஊரில் எல்லாக் கடைகளில் குளிரூட்டும் பெட்டி இருப்பதில்லை.
★ தற்போது நிகழும் எட்டு மணி நேர மின்தடை காரணமாக மாவு உப்புசம் அடைந்து கெட்டுப்போகும் வாய்ப்பு தான் அதிகம்.
★ மேலும் பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் காணப்படும் ஈகோலி எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது – 24° கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும்.
★ அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
★ இது ஒர் அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல!
★ எனவே மாவு அரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி அபராதமும் விதித்து வருகின்றது.
★ எனவே, நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு, முன் பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்.