LATEST

6/recent/ticker-posts

தில்லியில் காண வேண்டிய முக்கிய இடங்கள்_Important-Tourism-Places-To-See-In-Delhi

தில்லியில் காண வேண்டிய முக்கிய இடங்கள்
 இந்தியா கேட்(India Gate):

◆ இந்தியா கேட்(India Gate)  என்பது புதுதில்லியில் ராஜ்பத்தில்  அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.
◆ இது முதலில் அனைத்து இந்திய போர் நினைவு சின்னம்{All India War Memorial} என்று சொல்லப்பட்டது.
◆ யுனைடெட் கிங்டம் சில வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 13300 படைவீரர்களின் பெயர்கள் நுழை வாயில் மீது பொறிக்கப்பட்டு உள்ளது.

தாமரை கோவில்:
◆ தாமரைக் கோயில் என்பது இந்தியாவில் டெல்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத் தலமாகும்.
◆ தாமரை மலரின் வடிவம் கொண்டதால் இதன் பெயர் தாமரைக் கோயில் என பெயரிடப்பட்டுள்ளது.
◆ பஹாய் வழிபாட்டுத்தலம் டெல்லியின் வசீகரமான இடமாக உள்ளது.
◆ இது 1986ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
◆ இது இந்தியாவின் தாய் கோயிலாக சொல்லப்படுகின்றது.

■ அக்சர்தம் கோயில்:
◆ அக்ஷர்தம் கோயில் இது டெல்லியில் உள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும்.
◆ யமுனை ஆற்றங்கரையில் அருகில் அமைந்துள்ளது.
◆ இக்கோயில் ஆனது மணப்பாறை மற்றும் சலவைக் கல்லால் கட்டப்பட்டது.
◆ கோயிலின் மத்தியில் சுவாமி நாராயணன் சிலை வைக்கப்பட்டுள்ளது.